வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன், ஏப். ௧௫-அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கன் மற்றும் ராணுவ அமைச்சர் ஆஸ்டின் லாயிட் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டன் பிளின்கன் கூறுகையில், ‘இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களை கவனித்து வருகிறோம்.”சில அரசு அமைப்புகள், போலீஸ், சிறை துறை அதிகாரிகள் வாயிலாக மனித உரிமைகள் மீறப்படுகின்றன’ என்றார்.
இதற்கு பதிலடி தந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:எங்கள் நாட்டு விவகாரங்கள் குறித்து தெரிவிக்க உரிமை உள்ளதாக சிலர் நினைக்கலாம். அதேபோல், அவர்கள் நாட்டு விவகாரங்கள், மனித உரிமை மீறல்கள் உட்பட அனைத்து விவகாரங்கள் பற்றி கருத்து தெரிவிக்க எங்களுக்கும் உரிமை உண்டு.முக்கியமாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அதைப் பற்றி பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement