BLUEKRAFT DIGITAL FOUNDATION என்ற அமைப்பு அம்பேத்கரும், மோடியும் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு இசைஞானி
இளையராஜா
முன்னுரை எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் நீர் திட்டங்களுக்கு முன்னோடியே
அம்பேத்கர்
தான் என
பிரதமர் மோடி
கூறியதை எண்ணி ஆச்சரியப்பட்டதாக தெரிவித்துள்ளார் இளையராஜா.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள இளையராஜா. தொழில்மயமாக்கலைப் பொறுத்தவரை, பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக மொபைல் தயாரிப்பில். சாலைகள், இரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்காக இந்தியாவும் நன்கு அறியப்படுகிறது.
சமூக நீதி தொடர்பாக பல சட்டங்கள், அரசமைப்புச் சட்ட பாதுகாப்புகள் மூலமாகவும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஓபிசி ஆணையத்தை அமைத்தது ஆகியவற்றின் மூலமாகவும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். கழிவறைகள் கட்டுதல், வீடுகள் கட்டுதல் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடங்குதல் போன்றவற்றின் மூலம் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான பெரிய அளவிலான முயற்சியை மோடி முன்னெடுத்துள்ளார் என்றும் இதில் பயன்பெறுபவர்கள் சமூக ரீதியாக பின் தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், நிதித்துறை பங்கேற்பு ஆகியவற்றின் வெற்றிகள், சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவு, இலவச கேஸ் இணைப்புகள் வழங்கும் திட்டமும், பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவது, பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் தடைச்சட்டம் ஆகியவற்றின் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார் இளையராஜா.
அம்பேத்கர், நரேந்திர மோதி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை இந்த நூல் வெளிப்படுத்தியுள்ளது என்றும் இந்த இரண்டு ஆளுமைகளும் இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள் என்றும் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்யாமல் செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் இளையராஜா. ஆனால் இளையராஜா இப்படி பிரதமர் புகழ்ந்துள்ளதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Beastu ல இது தான் HIGHLIGHT; தெலுங்கு விஜய் பெண் ரசிகர்கள் உற்சாகம்!