பாங்கின்: அருணாச்சல பிரதேச மாநிலம் பாங்கினில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிவானது பல்வேறுபகுதிகளில் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். சீனா பெய்ஜிங்கில் இன்று காலை 9.26 மணிக்கு (பெய்ஜிங் நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் அதிர்வு அருணாச்சலப் பிரதேசத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை எனவும் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.