தொட்டது எல்லாம் தங்கமாகும் கதையாக எலான் மஸ்க் நிறுவனங்கள் அடுத்தடுத்து வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்து வரும் நிலையில், குறைந்த காலகட்டத்திலேயே உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..!
மாற்றங்கள் தொடர்ந்து விரும்பும் எலான் மஸ்க் சமுக வலைத்தளத்திலும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்து ஒரு பங்கை 54.02 டாலருக்கு வாங்கத் தயார் என அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்-ன் இந்த அறிவிப்புக்கு டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை செய்து வரும் நிலையில், இந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களாக வேன்கார்டு மற்றும் கிங்டம் நிறுவனம் டிவிட்டர் பங்கு இருப்பை அதிகரித்துள்ளது.
சாத்தியமில்லை
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ் கைப்பற்றத் தயார் என அறிவித்தாலும், இது சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது. அப்படி இல்லையெனில் மிகப்பெரிய தொகையைக் கடனாகப் பெற்ற பின்னரே டிவிட்டரைக் கைப்பற்ற முடியும் நிலையில் தான் எலான் மஸ்க் உள்ளார் எனச் சந்தை நிலவரம் கூறுகிறது.
34 பில்லியன் டாலர்
எலான் மஸ்க் அறிவிப்புக்குப் பின் டெஸ்லா பங்கு விலை குறைந்துள்ள நிலையில், இதன் சந்தை மதிப்பு 34 பில்லியன் டாலராக உள்ளது. இந்தத் தொகையை எலான் மஸ்க் திரட்ட வேண்டும் என்றால் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று டெஸ்லா பங்குகளை விற்பனை செய்ய வேண்டும், ஆனால் இதைச் செய்தால் அஸ்திவாரமே ஆடிவிடும்.
கடன்
இரண்டாவது வழி கடன் வாங்கி டிவிட்டரை கைப்பற்றுவது தான், உலகின் பெரிய பணக்காரராக எலான் மஸ்க் இருந்தாலும், அவரிடம் சொந்து வீடு கூட இல்லை, இந்த நிலையில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கடன் வாங்க முடியும்.
35 பில்லியன் டாலர்
அந்த வகையில் எலான் மஸ்க் ஏற்கனவே 20 பில்லியன் டாலர் அளவிலான கடனை வாங்கியுள்ளார், இதன் மூலம் இனி 35 பில்லியன் டாலர் அளவிலான தொகைக்கு மட்டுமே கடனை வாங்க முடியும். ஆனால் எலான் மஸ்க் சொன்ன 54.20 டாலர் விலையில் டிவிட்டர் நிறுவனத்தின் மதிப்பு 43 பில்லியன் டாலர்.
சாம்ராஜ்ஜியம்
இந்த நிலையில் எலான் மஸ்க் தனக்கான கடன் அளவை காட்டிலும் அதிகப்படியான தொகையைக் கடன் பெற வேண்டும். இது கட்டாயம் மஸ்க்-ன் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை இப்போது இல்லையென்றாலும், கட்டாயம் பாதிக்கும்.
கடனும், டெஸ்லா பங்குகளும்
கடனும், டெஸ்லா பங்குகளையும் விற்றும் வேண்டுமானால் வாங்க முடியும், ஆனால் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து டிவிட்டரை வாங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார் என்றால் மிகப்பெரிய திட்டம் வைத்துள்ளதாகவே தெரிகிறது.
elon musk may cross borrowing limit to acquire twitter
elon musk may cross borrowing limit to acquire twitter அளவுக்கு மீறி கடன் வாங்கும் எலான் மஸ்க்.. அரசன் ஆண்டியான கதை தானா..?!