அம்பத்தூர்: ஆவடியில் நரிகுறவர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து திரும்பும் வழியில், அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதுடன், அங்குள்ள ஒருவர் வீட்டில் கறிக்குழம்புடன்கூடிய இட்டலி சாப்பிட்டு மகிழ்ந்தார். பின்னர் நரிக்குறவ மக்கள் மத்தியில் உரையாற்றினார். அங்குள்ள பெண்கள் உள்பட பலருடன் உரையாடினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திரும்பும் வகையில், அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார்.