விஜய்,
பூஜா ஹெக்டே
,
செல்வராகவன்
போன்ற பலர் நடித்த
பீஸ்ட்
படத்தை
நெல்சன்
இயக்கியிருந்தார். அனிருத்தின் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒருபக்கம் வர படத்தின் வசூல் அடித்து நொறுக்கி வருகின்றது.
பீஸ்ட் திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் அந்த எதிர்பார்ப்பின் காரணமாகவே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுவதாக பலர் கருதுகின்றனர்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தளபதி..! இரண்டே நாட்களில் இத்தனை கோடியா ?
பொதுவாக இருக்கும்
விஜய்
படங்களை காட்டிலும் இப்படத்திற்கு சற்று எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் படத்தின் பாடல்கள், ட்ரைலர், ப்ரோமோக்கள் என அனைத்தும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றதால் ரசிகர்களும் இப்படத்தை மிகுந்த எதிர்பார்ப்பில் பார்த்தனர்.
பீஸ்ட்
எனவே அவர்களின் அளவு கடந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதே இப்படத்திற்கு கிடைக்கும் கடுமையான விமர்சனங்களுக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இசைவெளியீட்டு விழா நடக்காதது ரசிகர்களை மிகவும் ஏமாற்றியது.
விஜய்யின் பேச்சையும் குட்டி ஸ்டோரியையும் கேட்க ஆவலாய் இருந்த ரசிகர்களை இது ஏமாற்றம் அளிக்க தற்போது பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழா ஏன் நடத்தப்படவில்லை என்ற காரணத்தை சினிமா விமர்சகர் பிஸ்மி கூறியுள்ளார்.
பீஸ்ட்
அதாவது பீஸ்ட் படத்தில் இரண்டே பாடல்கள் மட்டுமே இருப்பதால் தான் இப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை என்றார். மேலும் இதற்கு எந்த ஒரு அரசியல் காரணங்களும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindi க்கு விஜய் காட்டிய ரெட் சிக்னல்!