இந்திய நிறுவனங்களை பாதிக்கும் இலங்கை பொருளாதார நெருக்கடி.. எப்படி..?

இலங்கையின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஒருபக்கம் வாங்கிய கடனை செலுத்த முடியாது என அறிவித்துள்ள இலங்கை அரசு, ஐஎம்எப்-யிடம் புதிய கடனுக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கையில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் மிகவும் முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பாதிப்பால் இந்தியாவில் தத்தம் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளது.

இலங்கை

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மூலம் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு பெரிய அளவில் சரிந்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் நேரடியாக வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்களின் வருமானம் மற்றும் லாப அளவுகள் தற்போது கடுமையாகப் பாதிக்கும் என நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

ஏற்கனவே விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு, மக்களின் வருமான இழப்பு ஆகியவற்றால் இலங்கையில் வர்த்தகம் செய்து வரும் இந்திய நிறுவனங்கள் பாதித்துள்ள நிலையில் தற்போது நாணய மதிப்பு சரிவால் அஸ்திவாரத்திற்கே பாதிப்பு ஏற்படும் வகையில் பிரச்சனை உருவாகியுள்ளது.

உணவு நிறுவனங்கள்
 

உணவு நிறுவனங்கள்

அமெரிக்காவின் Yum பிராண்ட்ஸ் இன்க், மிகப்பெரிய உரிமையாளர்களில் ஒன்றாக இருக்கும் இந்தியாவின் Sapphire Foods, இலங்கையில் கேஎப்சி, பிட்சா ஹட், மற்றும் டேகோ பெல் உணவகங்களை நடத்துகிறது. இதேபோல் சபையர் புட்ஸ்-ன் போட்டி நிறுவனமான ஜூப்லியன்ட் புட்ஸ் தனது டாமினோஸ் பிட்சா வர்த்தகத்தையும் இலங்கையில் வைத்துள்ளது.

பிற இந்திய நிறுவனங்கள்

பிற இந்திய நிறுவனங்கள்

இவ்விரு உணவு நிறுவனங்களைத் தாண்டி டாபர், ஏசியன் பெயின்ட்ஸ், தாஜ் ஹோட்டல்ஸ், இந்தியன் ஆயில், ஏர்டெல், அசோக் லேலண்ட், டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகியவையும் இலங்கையில் வர்த்தகத்தம் செய்து வருகிறது.

நிதி நிலை பாதிப்பு

நிதி நிலை பாதிப்பு

இலங்கை நாணயத்தின் மதிப்பில் ஏற்பட்ட தாக்கம், இலங்கையில் நேரடிச் வர்த்தகங்களையும் ஆப்ரேஷன்ஸ்களைக் கொண்டு உள்ள இந்திய நிறுவனங்களின் நிதிச் செயற்பாடுகளில் கட்டாயம் பிரதிபலிக்கும், சொல்லப்போனால் லாப அளவீடுகள் சரிவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 ரீடைல் முதலீட்டாளர்கள்

ரீடைல் முதலீட்டாளர்கள்

இதன் மூலம் தற்போது குறிப்பிட்டு உள்ள நிறுவனங்களின் மார்ச் மற்றும் ஜூன் காலாண்டு முடிவுகள் சரியவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய ரீடைல் முதலீட்டாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: srilanka இலங்கை

English summary

Sri Lanka economic crisis will impact Indian companies earnings and profits Amid currency devaluation

Sri Lanka economic crisis will impact Indian companies earnings and profits Amid currency devaluation இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும் இலங்கை பொருளாதார நெருக்கடி.. எப்படி..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.