நான்காவது ஆண்டாக தொடர்ந்து இந்த ஆண்டும் மழைக்காலம் வழக்கமான முறையில் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு சாதகமான இந்த அறிவிப்புடன் கடந்த ஆண்டில் பெய்த மழையின் புள்ளிவிவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே தலைநகர் டெல்லியில் நேற்று திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சுட்டெரிக்கும் கோடையில் இருந்து மக்கள் விடுபட்டு மழையை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.இந்தியா கேட் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது.