டெல்லி : இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளான சேவையும் சகோதரத்துவமும் ஏராளமான மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.புனித வெள்ளியன்று பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:’புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவுகூர்வோம். அவரின் கொள்கைகளான சேவையும் சகோதரத்துவமும் ஏராளமான மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்கிறது.’ என்று கூறியுள்ளார். இதே போல், விஷு பண்டிகையையொட்டி அனைவருக்கும் குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள மலையாளி மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘விஷு பண்டிகையையொட்டி குறிப்பாக உலகம் முழுவதும் குடியேறியுள்ள மலையாளி மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அதிகபட்ச மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் நிறைவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார். புனித வெள்ளி, விஷுவை தொடர்ந்து, போய்லா போய்ஷாக் தினத்தையொட்டி இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:’போய்லா போய்ஷாக் நாளில் வாழ்த்துக்கள். இந்த சிறப்பான விழா வங்காள கலாச்சாரத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. வரும் ஆண்டு மகிழ்ச்சி, அமைதி, வளம் ஆகியவற்றைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்.’ என்றார்.