இலங்கைக்கு விரைவில் 8 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் காஸ் கிடைக்க இருப்பதாக லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக வங்கியின் உதவியோடு காஸை இறக்குமதி செய்வதற்கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவிருக்கின்றன. இதற்கமைய இலங்கையில் காஸ் விநியோக நடவடிக்கை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று லிற்றோ நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த மாதத்தில், இதுவரை 8 இலட்சம் வீட்டுப் பாவனைக்கான காஸ் சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் அடங்கலாக இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள காஸின் அளவு 11 மெட்ரிக்தொன்னுக்கு மேற்பட்டதாகும் என்று லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.