இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி கொழும்பு நகரின் பல பகுதிகளில் மிகப் பிரம்மாண்டமான அளவில் போராட்டம் நடைபெற்றது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இலங்கையில் புத்தாண்டு தொடங்கிய மகிழ்ச்சியைக் கூட மக்கள் கொண்டாடவில்லை.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பொருளாதார நிலைமையைக் கையாளத் தெரியாத கோத்தபய பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவர் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கொழும்பு நகரில் பிரம்மாண்டமான அளவில் போராட்டம் தீவிரம் அடைந்தது. பெருமளவில் மக்கள் திரண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இலங்கையின் எதிர்க்கட்சியினர் கோத்தபய ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளனர்.