இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை வரையறுத்துள்ளது.
இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கும் ,முச்சக்கரவண்டிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாவுக்கும் மாத்திரமே ஒரு தடவையில் எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப முடியும்.
அத்துடன் கார், ஜீப் வண்டிகளுக்கு ஐயாயிரம் ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (15) பி.ப. 1.00 மணி முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எனினும் பஸ்கள், பாரவூர்த்திகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்புடையாகாது என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
வாகனங்கள் தொடர்பான தகவல்களை உளளடக்கிய ஆவணமொன்று பேணப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ், பாதுகாப்பு பிரிவு, அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இதனை கண்காணிக்கவுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொது மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்வதனாலேயெ எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.