வான் எல்லைக்குள் நுழையும் எதனையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நவீன ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, அயன் டோம் என்ற நவீன வான்பாதுகாப்பு ஆயுத அமைப்பை இஸ்ரேல் கொண்டுள்ள நிலையில், தற்போது புதிய வகை ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
அயன் பீம் என பெயரிடப்பட்டுள்ள இந்த வான்பாதுகாப்பு ஆயுதம், லேசர் மூலம் இயங்கும் வகையில் இஸ்ரேலைச் சேர்ந்த ரபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பு என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
வான் எல்லைக்குள் நுழையும் ஆளில்லா விமானம், ராக்கெட், ஏவுகணை போன்றவற்றை இந்த ஆயுதம் லேசர் மூலம் தாக்கி அழிக்கும் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வான்பாதுகாப்பு அமைப்பு, துல்லியமாகவும், சுலபமாகச் செயல்படக்கூடியதாகவும், மற்ற பாதுகாப்பு வழிமுறைகளையும் விட விலை குறைவானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானம் போன்றவற்றை சுட்டு வீழ்த்த லேசரைப் பயன்படுத்தும் உலகின் முதல் ஆற்றல் அடிப்படையிலான ஆயுத அமைப்பு இதுவாகும் என இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்