உக்ரைன் -ரஷியா போர்… ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல்!

ரஷியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான் உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர முயற்சிகளை முன்னெடுத்தது. உக்ரைனின் இந்த முயற்சி பலித்தால் அது அரசியல், பாதுகாப்பு ரீதியாக ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து தமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று ரஷியா கருதியது. எனவே உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் ரஷியாவின் இந்த கோரிக்கையை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் உக்ரைன் செயல்பட்டதால் ஆத்திரமடைந்த ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைன் -ரஷியா போர் மூண்டு கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஆக உள்ளது.

இந்த காலகட்டத்தில் உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளையும் குறிவைத்து ரஷியா நடத்திவரும் தாக்குதல்களால் பல்லாயிரணக்கான உக்ரைன் மக்கள் தங்களது உயிர், உடமைகளை இழந்துள்ளனர்.

நான் ஆபத்தானவன்: இம்ரான் கான் பகீர் பேச்சு!

இந்தகைய நெருக்கடியான சூழலில் உக்ரைன் குறித்து ஐ.நா.சபை தெரிவித்துள்ள ஒரு தகவல் உலக மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷியாவுடனான போரின் விளைவாக, உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என்று ஐ.நா. சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து வெளியேறி வருபவர்கள் ருமேனியா, போலந்து, ஹங்கேரி, , சுலோவேகியா, மால்டோவா ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ஐநா சபை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.