எப்படி எடுத்தாலும் ரசிகர்கள் ஓட வைச்சிருவாங்க என்ற நம்பிக்கைதான்! – #LikeDisLike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 14ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பெரிய ஹீரோக்களுடன் இளம் இயக்குநர்கள் இணையும்போது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முடியாமல் போவது ஏன்?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Sanjeev Shanmugam
பெரிய ஹீரோக்கள் கதையில் தலையிடாமல் இயக்குநர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்… எனக்கு எல்லாம் தெரியும்…என் இமேஜுக்கு இதுதான் செட்டாகும் என்று மூக்கை நுழைத்தால் இப்படித்தான்…
DGP
இயக்குநர்களின் அச்சமே காரணம்.
மதுராந்தக தேவன்
எப்படி படம் எடுத்தாலும் ரசிகர்கள் ஒட வைச்சிருவாங்க என்ற நம்பிக்கை தான்
Subash
சுருக்கமா சொன்னா அவர்களுக்கு அனுபவம் இல்லை
image
E Kadiravan
ஒரு இயக்குநர் கதையை தயார் செய்து விட்டு இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் என் கதைநாயகன் என்று இயக்குநர்கள் காலம் போய்விட்டது இயக்குநரை கதை நாயகன் தேர்வு செய்யும் புதிய பாதையில் போனதால் வந்த வினை..
அன்பு.பிரபு
பல மொழி படங்கள் பாத்து சினிமா ரசனை மாறுதல், ரசிகர்களுக்கு சாய்ஸஸ் ott தளங்கள் மூலம் அதிகமாகி இருக்கு, இளம் வெற்றி இயக்குநரோட ஸ்டார் ஹீரோ இணையும் ஏற்படும் அதிகப்படியான எதிர்பார்ப்பு,ரசிகர்கள் அவங்க ஹீரோவோட போட்டியாளர்கனு நெனக்குற ஹீரோக்கள் படம் வரும்போது வேணும்னே பண்ற நெகட்டிவ் விமர்சனம்
Balaji S. K.
படத்தை கலையாக பார்த்து ரசித்து எடுத்தால் வெற்றி பெறும். வியாபார நோக்கில் உருவாக்கினால் வெற்றி பெறாது. ரசிகர்களை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று நினைத்து logic இல்லாமல் எடுத்தால் ரசிகர்கள் சகித்துக் கொண்டு கைதட்டலாம். பொது மக்களுக்கு அந்த தேவை இல்லை.. இப்பொழுது டிக்கெட் விலை எல்லாம் அதிகம் என்பதால் படம் நன்றாக உள்ளதா என்று நண்பர்களிடம் கேட்டு விட்டு செல்கிறார்கள்.. உழைத்த காசை யார்தான் வீனாக்க விரும்புவார். அந்த காசில் பிச்சைகாரர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தா புண்ணியமாவது கிடைக்கும் என்று சிந்திக்கின்றனர்.. படம் எடுக்கும் போது புதிய இயக்குநர், அனுபவம் வாய்ந்த இயக்குனர்களின் உதவி அல்லது ஆலோசனை பெற வேண்டும்.. தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று செயல்பட கூடாது.. பாட்டில் மொழி இருக்க வேண்டும், படத்தில் கதை இருக்க வேண்டும்.. வெறும் தொழில் நுட்பம் மட்டுமே இருந்தால் படம் ஓடி விடாது.. ரசிகர்களை ரொம்ப நாளைக்கு முட்டாளாக்க முடியாதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.