நாட்டில் கொரோனாவின் பெருந்தொற்று தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து விமான போக்குவரத்து துறையானது பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நஷ்டத்தினை குறைக்க ஏர் இந்தியா உள்பட பல விமான நிறுவனங்களும் சம்பளத்தினை குறைத்தன.
ஆனால் தற்போது நாடு கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவரத் தொடங்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்தினை வழக்கம்போல கொடுக்க தொடங்கியுள்ளன.
இந்தியாவில் களைகட்டபோகும் திருமணங்கள்.. 3 மாதத்தில் 40 லட்சம் விழாக்கள் .. ரூ.5 லட்சம் கோடி செலவு!
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு தான் ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்திய வணிக விமானிகள் சங்கம் (ICPA), தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், விமான சேவையும் பழையபடி தொடங்கியுள்ளது. இதற்கிடையில் விமானிகளுக்கு சம்பளத்தினை பழையபடி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
கோரிக்கை
சம்பள குறைப்பினை தொடர எந்த காரணமும் இல்லை. ஆக விரைவில் சம்பளத்தினை மீட்டெடுக்க வேண்டும் என்றும் இச்சங்கம் கோரிக்கை விடுத்தது. மேலும் நிறுத்தப்பட்ட அனைத்து அலவன்ஸ்களையும் மீண்டும் கொடுக்க வேண்டும். தற்போது தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக டாடா நிறுவனம் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
சம்பளம் அதிகரிப்பு
இந்த நிலையில் இன்று வெளியான பிடிஐ அறிக்கையொன்று நாட்டில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பளத்தை தொற்று நோய்க்கு முந்தைய நிலைக்கு படிப்படியான மீட்டெடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பெருந்தொற்று பிறகு ஏர் இந்தியா fLYING அலவன்ஸ் 35%மும், சிறப்பு ஊதியம் 40%, இது தவிர மற்ற அலவன்சும் 40% குறைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு ஊதியம் மற்றும் மற்ற அலவன்சும் முறையே 20%, 25% மற்றும் 25%மும் சேர்க்கப்படுகின்றது.
இவர்களுக்கும் அதிகரிப்பு
இதே கேபின் குழு உறுப்பினர்களுக்கு fLYING அலவன்ஸ் மற்றும் மற்ற அலவன்சும் 15% மற்றும் 20% குறைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 10% மற்றும் 5% மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளி நாட்டில் வசிக்கும் ஊழியர்கள்
இதேபோல தொற்று நோய் காலத்தில் வெளி நாட்டில் வசிக்கும் இந்திய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியம் 10% குறைக்கப்பட்டது. இது அதிகபட்சமாக 300 டாலர்கள் என ஏர் இந்தியா ஆவணம் தெரிவித்துள்ளது. தற்போது இதில் 5% சேர்க்கப்பட்டுள்ளது.
100% திறனுடன் செயல்பாடு
ஓமிக்ரான் மத்தியில் முடங்கியிருந்த விமான சேவையானது, இரண்டாவது அலையின்போதும் கடும் சரிவினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி மாதத்திற்கு பிறகு உள்நாட்டு விமான சேவையானது மீண்டு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது சர்வதேச விமான சேவையும் மேம்படத் தொடங்கியுள்ளது. மத்திய அரசும் மார்ச் மாதம் வழக்கம்போல 100% திறனுடன் சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி கொடுத்துள்ளது. ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு முழு திறனுடனும் சர்வதேச விமான சேவையானது இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பள அதிகரிப்பானது வந்துள்ளது.
air india starts restoring salaries in phased manner: check details
air india starts restoring salaries in phased manner: check details/ஏர் இந்தியா ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குறைக்கப்பட்ட சம்பளத்தில் சற்று அதிகரிப்பு..!