கீவ் : கருங்கடலில் இருந்த ரஷ்ய போர்க்கப்பலை, உக்ரைன் படையினர் ஏவுகணை வீசி, தகர்த்துள்ளனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விலகிச் சென்றுள்ள ரஷ்ய படைகள், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. மரியுபோல், கார்கிவ் ஆகிய நகரங்களில், ஏவுகணைகளை வீசியும், பீரங்கிகளை வைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்டின் தெற்கில் உள்ள கருங்கடல் பகுதியில் இருந்த ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலை, உக்ரைன் படையினர் ஏவுகணை வீசி தகர்த்துள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான இந்த போர்க்கப்பலில், 16 ஏவுகணைகள் இருந்ததாகவும்; அந்த கப்பல் சேதமடைந்ததால், அதில் இருந்த 500க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள், அதிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ராணுவத்தால் ரஷ்ய போர்க்கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது அந்நாட்டிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.தேர்தல்களில் ரஷ்யா தோல்விஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும், ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சில், ஐ.நா., பெண்கள் நிர்வாக வாரியம் உள்ளிட்ட நான்கு அமைப்புகளுக்கான தேர்தல்கள் நேற்று நடந்தன. இந்த நான்கு தேர்தல்களிலும் ரஷ்யா போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.
Advertisement