கீவ்-வில் குவிந்த மனித சடலங்கள்: எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பகீர் தகவல்!


உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி இதுவரை 900 பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என அந்த நகரின் தலைமை காவல் அதிகாரி ஆண்ட்ரி நெபிடோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவ தாக்குதலை தொடங்கி கிட்டத்தட்ட 50 நாள்களை தொட்டு இருக்கும் நிலையில், தற்போது ரஷ்ய ராணுவம் உக்ரைனின் முக்கிய நகரங்களில் இருந்து தங்களது படைகளை பின்னகர்த்தி நாட்டின் கிழக்குப் பகுதியான டான்பாஸில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தநிலையில், தற்போது தலைநகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இதுவரை ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் சடலங்களை மீட்டெடுக்கும் பணியில் உக்ரைன் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இதுவரை 900 பொதுமக்களின் சடலங்களை கண்டெடுத்து இருப்பதாக அந்த நகரின் தலைமை காவல் அதிகாரி ஆண்ட்ரி நெபிடோவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள விவரத்தில், இதுவரை உக்ரைன் தலைநகர் கீவ்வில் மட்டும் 900 பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை தடயவியல் நிபுணர்களுக்கு உரிய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

மேலும் கண்டெடுக்கப்பட்ட இந்த 900 சடலங்களில் 350 சடலங்கள் ரஷ்யாவின் போர் குற்றங்கள் அதிகமாக நடைபெற்ற புச்சா நகரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து போரோடியங்கா மற்றும் மகரோவ் ஆகியபகுதிகளில் இன்னும் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருவாகவும் அவற்றில் இன்னும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.    

இதுவரை உக்ரைனில் பயன்படுத்தாத ஆயுதம்: பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர் பகீர் தகவல்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.