குஜராத்: கே.கே.படேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

குஜராத் மாநிலம் பூஜ்ஜில் அமைந்துள்ள கே.கே.படேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

குஜராத் மாநிலம் பூஜ்ஜில் அமைந்துள்ள கே.கே.படேல் உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனையை இன்று காணொலி வாயிலாக பிரதமர்  நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். பூஜ்ஜில் உள்ள ஸ்ரீ கச்சி லேவா படேல் சமாஜால் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கச்சில் அமைந்துள்ள முதல் தொண்டு நிறுவன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இதுவேயாகும்.

PM Modi dedicates K K Patel Super Speciality Hospital in Bhuj to nation in  Bhuj, Gujarat- Fast Mail News

200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையான இதில், இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி (கேத்லாப்), கார்டியோடோராசிக் சர்ஜரி, ரேடியேஷன் ஆன்காலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, சர்ஜிகல் ஆன்காலஜி, நெப்ராலஜி, யூராலஜி, நியூக்ளியர் மெடிசின், நியூரோ சர்ஜரி, மூட்டு மாற்று மற்றும் ஆய்வகம், கதிரியக்கவியல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேவைகளை இப்பகுதி மக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் குறைந்த கட்டணத்தில் இங்கு சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.