கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளியை கொலை செய்து, ஒரு மர்ம கும்பல் பங்களாவில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கவுண்டம்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் இன்று கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…திருவண்ணாமலைக்கு 1000 சிறப்பு பஸ்கள்- சித்ரா பவுணர்மியையொட்டி ஏற்பாடு