சபரிமலையில் விஷூ கனி தரிசனம்; ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சபரிமலை- சபரிமலையில் நடந்த சித்திரை விஷூ கனி தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

latest tamil news

சித்திரை விஷூ திருவிழாவுக்காக சபரிமலை நடை ஏப்., 10 மாலை திறக்கப்பட்டது. ஏப்., 11 முதல் வழக்கமான பூஜைகள், உதயாஸ்தமன பூஜைகள், படி பூஜையும் நடக்கிறது. சித்திரை விஷூ நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் இரவு ஐயப்பன் விக்ரகம் முன் மலர்கள், காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது.

latest tamil news

நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் கனி தரிசனம் நடந்தது. தேவசம்போர்டு நிர்வாகிகள், பக்தர்கள் கனி தரிசனம் நடத்திய பின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி பக்தர்களுக்கு நாணயங்களை கைநீட்டம் வழங்கினர். நேற்று அதிகாலை முதல் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று 18 படிகளில் ஏறிசென்று தரிசனம் நடத்தினர். ஏப்., 18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.