பண்டிகைக் காலப்பகுதியில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
சட்டத்தை மதித்தல் , வாகனங்களை செலுத்தும் போது வேக கட்டுப்படு , ஆத்திரப்படாமல் இருத்தல் மற்றும் மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதை தவிர்த்தல் முதலானவற்றை கவனத்திற்கொள்வதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதி பயிற்சி பிரிவு தாதி அதிகாரி புஸ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புத்தாண்டில் பதிவாகும் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவாக காணப்பட்ட போதிலும், இந்தவருடம் விபத்துக்களால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் குறைவை காணக்கூடியதாக இல்லை என்றும் அவர் கூறினார்.