மெக்சிகோ நாட்டு கடல்பகுதியில் சினிமாவில் வருவதைப் போன்று நடுக்கடலில் படகை துரத்திச் சென்று 1.2 டன் எடையுள்ள கோக்கைன் போதைப் பொருளை மெக்சிகோ ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பசிபிக் கடலில் அமைந்துள்ள Puerto Vallarta என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடுக்கடலில் போதைப்பொருளை கடத்திச் செல்வதை அறிந்த மெக்சிகோ ராணுவத்தினர் மற்றொரு படகில் மின்னல் வேகத்தில் துரத்தி சென்று அந்த படகை பிடித்து போதைப் பொருளை கைப்பற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.