சென்னை: சென்னை திருமுல்லைவாயிலில் குறவர் இன மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித்தொகை உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் ரூ.36 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த முதலமைச்சருக்கு குறவர் இன மக்கள் நன்றி தெரிவித்தனர்.
