ராய்ப்பூர் : ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் திட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க மாற்று ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
