மகாராஷ்டிரா மாநிலம், தானேயில் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல் (76) என்பவர் வசித்து வருகிறார். தனது மருமகள் காலை உணவை வழங்கவில்லை என்பதால் கோபமடைந்த அவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் கூறியதாவது, “மருமகள் டீயுடன் காலை உணவு கொடுக்காத காரணத்தால் கோபமடைந்த மாமனார் மருமகளை சுட்டதாக தெரிகிறது. துப்பாக்கியால் சுட்டதால் 42 வயதான அந்த பெண்ணுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பெண் தானேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அந்த நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட காஷிநாத் பாண்டுரங் பாட்டீல், மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 307 (கொலை முயற்சி) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் நடந்துள்ளது. தாக்குதலுக்கு வேறு ஏதேனும் தூண்டுதல் உள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்றார்.