எலோன் மஸ்க்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது கருத்துக்கணிப்பு ஒன்றன் மூலம் தற்போது விவாதத்தில் உள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், ட்விட்டர் பங்குகளை வாங்குவது குறித்து அவர் கருத்து கேட்டுள்ளார். ட்விட்டரின் 100% பங்குகளை வாங்குவதற்கான சிறந்த மற்றும் இறுதி ஆஃபர் என்ன என்று பங்குதாரர்களிடம் மஸ்க் கேட்டுள்ளார். மஸ்க் ட்விட்டரின் ஒரு பங்கின் விலையை ஒரு பங்குக்கு $54.20 என நிர்ணயித்துள்ளார்.
கார்ப்பரேட் ரைடர்-பாணி உத்தி
கார்ப்பரேட் ரைடர் பாணியில் எலோன் மஸ்க், ட்விட்டரில் ட்விட்டரை வாங்குவதற்கான ஆஃபரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் பங்குதாரர்களின் கருத்தைக் கேட்டார். ஒரு நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையிலான பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்கள் கார்ப்பரேட் ரெய்டர் என்று அழைக்கப்படுகிறார்கள். அதிகப்படியான பங்குகளின் மூலம் அவர்களிடம் போதுமான வாக்குரிமையும் வந்துவிடுகிறது. அதன் உதவியுடன் அவர் நிறுவனத்தின் நிர்வாகத்தை மாற்ற முடியும்.
ட்விட்டரை என்ன விலையில் வாங்கலாம்? எலன் மஸ்க் கூறியது என்ன?
ட்விட்டரின் ஒரு பங்கின் விலை $54.20 என்றிருப்பது சரியானதா இல்லையா என்பதை நிறுவனத்தின் வாரியம் அல்ல, பங்குதாரர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று எலோன் மஸ்க் கூறுகிறார். மஸ்க் தனது கருத்துக்கணிப்பில் ‘ஆம்’ மற்றும் ‘இல்லை’ என்ற விருப்பத்தை அளித்துள்ளார். மஸ்க் ட்விட்டரின் விலையை 41.39 பில்லியன் டாலர்கள் என நிர்ணயித்துள்ளார். முன்னதாக, அவர் ட்விட்டரின் இயக்குநர்கள் குழுவில் (போர்ட் ஆஃப் டைரக்ட்ரஸ்) சேர மறுத்துவிட்டார்.
மேலும் படிக்க | எலன் மஸ்க்கால் ட்விட்டர் நிறுவனத்தில் சலசலப்பு…ஊழியர்கள் பணயக் கைதிகளா?
பிளான்-பி-யும் தயாராக உள்ளது
டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க் கூறுகையில், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் வாரியம் தனது சலுகையை நிராகரித்தால், தன்னிடம் பிளான் பி உள்ளது என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், எலோன் மஸ்க்கின் சலுகை குறித்து எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், அனைத்து ஊழியர்களுடனும் முதலில் பேசப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக நிறுவனம் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.
இப்போது 9%க்கும் அதிகமான பங்குகள் உள்ளன
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு இந்த திட்டத்தை கவனமாக பரிசீலிக்கும் என்றும், அதன் பிறகே அடுத்த உத்தி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ட்விட்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மஸ்க் தற்போது ட்விட்டரின் ஒன்பது சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறார். இப்போது அவர் முழு நிறுவனத்தையும் வாங்க விரும்புகிறார். இப்போது பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நிறுவனம் அவரது சலுகையை நிராகரித்தால், அவரது அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பதுதான்.
மேலும் படிக்க | Elon Musk – Twitter: டிவிட்டரை மொத்தமாக வாங்க தயாராகும் எலான் மஸ்க்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR