நியூயார்க்,-நியூயார்க்கில், சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பிரான்க் ஜேம்ஸ் என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில், 12ம் தேதி அதிகாலை, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 10 பேர் படுகாயமடைந்தனர். உயிர் பிழைக்க தப்பி ஓடிய போது கீழே விழுந்து, 13 பேர் காயம் அடைந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பிரான்க் ஜேம்ஸ், 62, என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்.
அவரை கண்டுபிடித்து தரும் நபருக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், போலீசார் பிரான்க் ஜேம்ஸை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இத்தகவலை, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்டார்.ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியதற்கான காரணத்தை அறிய, ஜேம்சிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கறுப்பின இளைஞர் சுட்டுக்கொலைஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், கறுப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 4ம் தேதி, பாட்ரிக் லியோயா, 26, என்ற இளைஞர், காரில் போலி உரிமம் வைத்து ஓட்டியதால், அவரை போலீஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தி உள்ளார்.அவரிடம் இருந்து தப்பித்து ஓடிய பாட்ரிக்கை, மடக்கிப் பிடித்த அந்த அதிகாரி தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், பாட்ரிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement