அமெரிக்க எம்.பி.க்கள் அறிவிக்கப்படாத பயணமாக திடீரென தைவானுக்கு சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது.
ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா கூறி வருகிறது.
தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் எனவும் சீனா எச்சரித்து வருகிறது.
எனினும், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. அந்நாட்டு அமெரிக்கா அதிக அளவு ராணுவ ஆயுதங்களை அளித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் போர் தொடுத்தது போல், தைவான் மீது சீனாவும் போர் தொடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க எம்.பி.க்கள் அடங்கிய குழு திடீரென தைவானில் விஜயம் செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கன மழை
தென் ஆப்பிரிக்காவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது.
வெள்ளம், நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
வெள்ளம், நிலச்சரிவால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைய ரஷ்யா எதிர்ப்பு
சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் நேட்டோ அமைப்பில், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தொழிலதிபர் விருப்பம்
டுவிட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.
டுவிட்டா் நிறுவனத்தில் சுமாா் 9 சதவீத பங்குகளை வைத்துள்ள அவா், அதன் இயக்குநா்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரு தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
இதுதொடர்பாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைவா் பிரெட் டெய்லருக்கு அவா் புதன்கிழமை கடிதம் அனுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “