தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் சுமார் 400 விசைப்படகுகளையும் மீனவர்கள் கரை ஒதுக்கியுள்ளனர்.
தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி மீன்களின் இனபெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு 60 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 400 விசைப்படகுகளையும் மீனவர்கள் கரை ஒதுக்கினார்கள். மீன்பிடி தடைக் காலத்தை முன்னிட்டு துறைமுகத்தில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்தில் இருந்து விசைப்படகுகளுக்கு மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் அனுமதி சீட்டும் நிறுத்தபட்டது.
இன்று முதல் தடைக்காலம் தொடங்கியுள்ளதால், மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தியுள்ளதோடு, மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM