தொண்டு, சகோதரத்துவம் ஆகிய இயேசுவின் கொள்கைகள் மக்களுக்கு வழிகாட்டி – பிரதமர் நரேந்திர மோடி

இயேசுவின் தொண்டு, சகோதரத்துவம் ஆகிய கொள்கைகள் மக்களுக்கு வழிகாட்டியாக விளங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கிறித்துவர்களால் பெரிய வெள்ளி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், இயேசு கிறித்துவின் துணிவையும் தியாகத்தையும் நினைவுகூரும் நாள் பெரிய வெள்ளி எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டு, சகோதரத்துவம் ஆகிய அவரது கொள்கைகள் மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.