இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில் முக்கியமான சேமிப்பு திட்டம் தான் கிசான் விகாஸ் பத்திரம். இந்த திட்டம் 1988ம் ஆண்டில் விவசாயிகளுக்கான திட்டமாக தொடங்கிய நிலையில், தற்போது அனைவரும் பயனடையும் வகையில் உள்ளது,
இது நிரந்தர வருமானம் தரக்கூடிய நீண்டகால திட்டமாகும். இது சந்தை அபாயம் இல்லாத ஒரு பாதுகாப்பான திட்டமாகும்.
6 கெமிக்கல் பங்குகளை வாங்கி போடுங்க.. லாபம் கிடைக்கலாம்.. நிபுணர்கள் பரிந்துரை!
பங்கு சந்தையை விட குறைவான வருமானம் தரும் திட்டமாக இருந்தாலும், ரிஸ்க் குறைவான ஒரு திட்டமாகும்.

இது சிறந்த தேர்வாக இருக்கும்
எனினும் உங்களுக்கு தேவை அதிகம் இருந்தால், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற பங்குகளில் முதலீடு செய்யலாம். ஆனால் பாதுகாப்பான ரிஸ்க் எடுக்க விரும்பாத ஒரு திட்டமாக இருக்க வேண்டுமெனில், உங்களுக்கு அஞ்சலக திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அந்த வகையில் கிசான் விகாஸ் பத்திரம் என்பது சிறந்த தேர்வாக இருக்கும்.

எப்போது இரட்டிப்பு?
இது ஒரு முறை முதலீடு செய்யும் ஒரு முதலீட்டு திட்டமாகும்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்களில் இருமடங்கு ஆகும். உதாரணத்திற்கு ஏப்ரல் 1, 2022 அன்று இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாக வைத்துக் கொள்வோம். உங்களது முதலீடு 10 ஆண்டுகள் 4 மாதங்களில் இருமடங்கு ஆகிறது. இந்த திட்டத்திற்கு தற்போதைய நிலவரப்படி 6.9% வட்டி வழங்கப்படுகிறது.

நல்ல விஷயம்
இந்த திட்டத்தில் நீங்கள் இணையும்போது கிடைக்கும் வட்டியே, இறுதி வரையிலும் கிடைக்கும். இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய 18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும், இணைய தகுதியானவர்கள் தான். இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு தேவையில்லை. ஒரு குழந்தை அல்லது முதியவர்களுடனும் இணைந்தும் முதலீடு செய்யலாம். அப்படி இணையும் போது குழந்தையின் வயது, பாதுகாவலரின் பெயர் அல்லது பெற்றோர் பெயரை மறக்காமல் கொடுக்க வேண்டும். இந்த பத்திரத்தினை அறக்கட்டளைகள் கூட வாங்கலாம், NRI-கள் வாங்க அனுமதியில்லை.

எப்படி தொடங்குவது?
கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று, தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்து சேமிப்பைத் துவங்கலாம். பாஸ்புக் வசதியும் உண்டு. இந்த திட்டத்தில் விண்ணப்பதாரர் எதிர்பாராத வகையில், மரணமடையும் பட்சத்தில், அவரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினி முதிர்ச்சித் தொகையைப் பெறுவதற்கான வசதியும் உண்டு.

வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்
முதலீட்டாளர்கள் விரும்பினால் இந்த சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு. அப்படி இல்லை எனில் ஒருவேளை முன்கூட்டியே பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு இந்த திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

வரி சலுகை உண்டா?
இந்த கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்கும், மற்ற திட்டங்களை போல் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகு எடுக்கும்போது டிடிஎஸ் விலக்கு அளிக்கப்படுகிறது.

கடன் பெற முடியுமா?
பொதுவாக பல சேமிப்பு திட்டங்களில் அதனை பிணையாக வைத்து கடன் பெற முடியும். அதனை போல கிசான் விகாஸ் பத்திரத்தினை வைத்து கடன் வாங்க முடியும். இவ்வாறு பிணையாக வைத்து வாங்கும் கடன்களுக்கு, மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது வட்டி விகிதமும் சற்று குறைவாகவே இருக்கும்.
This post office scheme will double your money with guaranteed return
This post office scheme will double your money with guaranteed return/நிரந்தர வருமானம் தரும் KVP.. எத்தனை வருடங்களில் இருமடங்காகும்..!