கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட ஆட்சியர் அம்ரித், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், ஊட்டிக்கு வரும் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறினார்.
மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் மற்ற வாகனங்கள் குன்னூர் வழியாகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் அனுமதிக்கப்படும் என்றார். இந்த போக்குவரத்து மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன.