பந்துகளை பறக்கவிட்ட ராகுல் திரிபாதி: வெற்றியை சுலபமாக கைப்பற்றிய சன்ரைசர்ஸ்!


ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல்-லின் 25வது லீக் போட்டியில் மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டு கடைபிடிக்கப்படும் சம்பரதாயமான பந்துவீச்சையே முதலில் தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பமே முதல் 5 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து மிகவும் தடுமாறியது.

ஆனால் அதற்கடுத்து வந்த நிதிஸ் ராணா மற்றும் ரஸ்ஸல் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினார்.

அதிரடியாக பந்துகளை பறக்கவிட்ட ரஸ்ஸல் 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் என விளாசி 25 பந்துகளில் 49 ஓட்டங்களை சேர்த்தார்.

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களை குவிக்க முடிந்தது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கைப்பற்றியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ராகுல் திரிபாதி 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்களையும், ஐடன் மார்க்ராம் 36 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்களையும் சேர்த்து இருந்தனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை ஹைதராபாத் அணி வீரர் நடராஜன் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

மேலும் ஆட்டநாயகனாக பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்ட ராகுல் திரிபாதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிபட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.