பாகிஸ்தானில் 19 பேரை கேபினட் அமைச்சர் பதவியில் நியமிக்க பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் முடிவு செய்துள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் ஷெபாஷ் ஷெரீப், தனது கட்சியை சேர்ந்த 12 பேர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு கேபினெட் அமைச்சர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ராஜா பர்வேஷ் அஷ்ரப் போட்டியிடுகிறார். மற்றொரு கூட்டணி கட்சியான ஜாமியாத் உலமா இ இஸ்லாம் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியும், 3 இணை அமைச்சர் பதவிகளும் வழங்கப்படுகிறது.
இதுபோல சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்குந்வா, பஞ்சாப் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் நியமிக்க உள்ளார்.