புதுச்சேரியில் பேபர் சிம்னி புதிய ஷோரூம் திறப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் பேபர் சிம்னி நிறுவனத்தின் புதிய ஷோரூமை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள பேபர் சிம்னி நிறுவனம் தனது வெள்ளி விழா ஆண்டையொட்டி, புதிய ஷோரூமை, புதுச்சேரியில் அமைத்துள்ளது. அண்ணா சாலையில் இயங்கி வரும் ஸ்ரீகணேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேபர் சிம்னி நிறுவன ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு கணேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் செல்வமணி தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

புதிய ஷோரூமில், பேபர் சிம்னி நிறுவனத்தின் சமையல் அறைக்கான ‘3டி-சிம்னிகள், 3-இன் 1 சிம்னிகள், ஆட்டோ கிளீன், குக்கர், மிக்சி, மைக்ரோ ஓவன், பிளாஸ்க், கிரைண்டர், ஹீட்டர், காஸ் ஸ்டவ், 5 பர்னல், 7 பர்னல், வாட்டர் பியூரி பயர், டிஷ் வாஷ், குக்டாப், ஓ.டி.ஜி., உள்ளிட்ட பொருட்கள் ஏராளமான மாடல்களில் விற்பனைக்கு உள்ளன.

திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்கள் வாங்கும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இலவச பரிசு வழங்கப்படுகிறது. திறப்பு விழாவில் பிராங் பேபர் பொது மேலாளர் அஜய்சச்சிதேவா, அதிகாரிகள் காளீஸ்வரன், அதேஷ்குமார், அமார்பால், ராஜேஷ், கணேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் செல்வமணி, விக்னேஷ் மற்றும் வியாபார பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.