பென்னாகரம்: ஆதரவற்ற குழந்தைகள் மத்தியில் திருமணம் செய்துகொண்ட ஜோடி

பென்னாகரம் அருகே ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நலிவடைந்த தெருக்கூத்து கலைஞர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கி ஒரு தம்பதி திருமணம் செய்துகொண்டனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள தின்னப்பட்டியைச் சேர்ந்த ’மாவீரன் பிள்ளை’ பட இயக்குநர் ராஜா என்பவருக்கும், அனுசியா என்கின்ற பெண்ணுக்கும் நாகதாசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்களைவிட ஆதரவற்ற குழந்தைகளும், முதியவர்களும், பெரியவர்களும் காதுகேளாத குழந்தைகளும், மாற்றுத் திறனாளிகளும் அதிகளவில் கலந்துகொண்டனர். அதேபோல் நலிவடைந்த தெருக்ககூத்து கலைஞர்களும் அதிகமாக இருந்தனர்.
image
image
பொதுவாக திருமணம் என்றால் உறவினர்கள் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உபசரிப்பது வழக்கம். ஆனால் இந்த திருமணத்தில் புதுமாப்பிள்ளை ராஜா ஆதரவற்றவர்களை அழைத்து வந்து திருமணத்தில் கலந்து கொள்ள செய்தார். புதுமாப்பிள்ளை ராஜா அனைவரையும் வாகனம் வைத்து அழைத்துவந்திருந்தார். அனைவருக்கும் புது மண தம்பதிகளே உணவு பரிமாறினர். இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் புதிய ஆடைகள் கொடுத்து மகிழ்ந்தனர். அதேபோல் ஆதற்றவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் நெகழ வைத்தது.
image
image
இந்த நிகழ்வில் திரைப்பட நடிகர் ராதாரவி, சந்தனக்கடத்தல் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து மாப்பிள்ளை ராஜா கூறும்போது ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதவரற்ற முதியவர்களுக்கு ஆஸ்ரமங்களிலேயே உணவளிக்கப்பட்டு வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற திருமண விழாக்களுக்கு அழைத்து உணவளிப்பதால் அவர்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.