ரஷ்யாவின் பயங்கர போர்க்கப்பலான மாஸ்க்வா தண்ணீரில் மூழ்கிய நிலையில் அதன் காரணமாக விளாடிமிர் புடின் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 50வது நாளை எட்டியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் மிக முக்கிய மற்றும் மிகப் பயங்கரமான போர்க்கப்பலாக கருதப்பட்ட ஏவுகணைகளை ஏந்திய மாஸ்க்வா கப்பல் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த ஏவுகணை போர்க்கப்பல் உக்ரைன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உக்ரேனிய எம்பி லிசியா தெரிவிக்கையில், கீவ்வில் சற்று முன்னர் 3 இடங்களில் குண்டு வெடித்துள்ளது.
ஒரு மணி நேரமாக வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதாவது மாஸ்க்வா கப்பல் மூழ்கியதால் புடின் கோபமடைந்துள்ளார், நாங்கள் ரஷ்யாவின் எரிச்சலை பார்த்து கொண்டு தான் இருப்போம் என பதிவிட்டுள்ளார்.