போர்க்கப்பல் மூழ்கியதற்கு பதிலடி… கீவ் நகரை அழிக்கும் ரஷ்யா! வீடியோ ஆதாரம்


கருங்கடலில் ரஷ்யாவின் முக்கிய போர்க்கப்பல் மூழ்கியதையடுத்து உக்ரைன் தலைநகர் கீவில் பயங்கர வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் முக்கிய போர்க்கப்பலான மாஸ்க்வாவை கருங்கடலில் வைத்து  ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்தது.

எனினும், மாஸ்க்வாவில் வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாகவும், அதைத்தொடர்ந்து கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், கப்பலில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், மாஸ்க்வா கடலில் மூழ்கியதை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது.

போர்க்கப்பல் மூழ்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய முன்னெடுத்துள்ள புதிய வான்வழி தாக்குதல் காரணமாக உக்ரைன் முழுவதும் சைரன்கள் ஒலித்துள்ளது.

ரஷ்யா தாக்குதலின் விளைவால் நகரில் உள்ள சில மாவட்டங்களில் மின்சாரம் தடைகப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம், கார்கிவ் மற்றும் கெர்சனிலும் பய்ஙகர தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.