சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று திட்டப்பணிகளை விரைவு படுத்துமாறு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் போதிய நிதி இல்லை என தெரிவித்ததால், மக்கள் நலத்திட்ட பணிகள் செய்வதற்காக வரியை உயர்த்தியதாகவும் விளக்கம் அளித்தார். சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்,மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்,மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.