வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது மத வழிபாடு உரிமையை விட முக்கியமானது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியதற்கு எதிரான ஹிந்து தர்ம பரிஷித் தொடர்ந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
கொரோனா தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது கோவில்கள் வழிபாட்டுத் தளங்கள் தொடர்ந்து மூடியிருக்க தமிழக அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கு எதிராக ஹிந்து தர்ம பரிஷித் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வாழ்வதற்கான அடிப்படை உரிமைக்கு ஆபத்து ஏற்படும் பொழுது மத வழிபாடுகளை பின்பற்றுவதற்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை சற்று தள்ளி வைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியிருந்தது. மேலும் இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்த நிலையில், கடந்த மார்ச் 16 ஆம் தேதி மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM