வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மன்மதலீலை திரைப் படத்தின் ஓ.டி.டி உரிமையை நிறுவனம் கைப்பற்றியுள்ளது ஆஹா ஓடிடி தளம்.
சிலம்பரசன் நடித்து வெற்றிபெற்ற மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து மன்மத லீலை என்ற திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த அந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சென்னை போன்ற பெருநகரங்களில் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தமிழுக்கு புதிதாக வந்துள்ள ஆஹா ஓ.டி.டி தளம் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிந்தைய உரிமையை பெரும் தொகை கொடுத்து பெற்றுள்ளது. அதேபோல் மன்மதலீலை படத்தின் தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரித்துள்ள மற்றொரு படமான ‘குருதி ஆட்டம்’ படத்தின் வெளியீட்டுக்கு பிந்தைய உரிமையை ஆஹா ஓ.டி.டி தளம் பெற்றிருப்பதாக அந்த நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
குருதி ஆட்டம் படத்தில் அதர்வா பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர் மேலும் அந்த படத்தை 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியிருக்கிறார். இதைப்போல இன்னும் பல படங்களின் உரிமையை கைப்பற்றும் முயற்சியில் ஆஹா தளம் முயற்சித்து வருகிறது.