மர்மம் வாய்ந்த 14ம் நூற்றாண்டு கல் சவப்பெட்டி…தயவுசெய்து திறக்காதீர்கள்: அலறும் பொதுமக்கள்!


பிரான்ஸ் நாட்டில் உள்ள நோட்ரே டேம் கதீட்ரல் பேராலயத்தில் கண்டெடுக்கப்பட்ட 14ம் நூற்றாண்டை சேர்ந்த கல் சவப்பெட்டியை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள நோட்ரே டேம் கதீட்ரல் பேராலயத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளின் போது பேராலயத்தில் அடிப்பகுதியில் இருந்து 14ம் நூற்றாண்டை சேர்ந்த கல் சவப்பெட்டி மற்றும் 19ம் நூற்றாண்டை சேர்ந்த வெப்பமூட்டும் அமைப்பு போன்றவை கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

14ம் நூற்றாண்டை சேர்ந்ததா அல்லது அதற்கும் முற்பட்ட காலத்தை சேர்ந்ததா என்பது தெரியாத கல் சவப்பேட்டி நல்ல நிலைமையில் இருப்பதாகவும், ஆனால் அதன் மேல் விழுந்த மண் மற்றும் கல்பாறைகளால் சிறிது சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆராச்சியாளர்கள் இந்த கல் சவப்பெட்டியை திறக்க வேண்டாம் என்றும், அது தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய மர்மம் நிறைந்த கல் சவப்பெட்டியை திறப்பது வரவிருக்கும் கடினமான வருடங்களை மேலும் சிரமம் நிறைந்ததாக மாற்றிவிடும் என பொதுமக்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து பேசிய பிரான்சின் தேசிய தடுப்பு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராச்சியாளர்கள் குழு, 14ம் நூற்றாண்டை சேர்ந்த கால சவப்பெட்டியை கண்டெடுக்கப்பட்ட சில காலங்களிலேயே எண்டோஸ்கோபிக் கமெரா கொண்டு ஆய்வு செய்து விட்டதாக தெரிவித்துள்ளது.

எண்டோஸ்கோபிக் கமெரா கொண்டு ஆய்வு செய்ததில் அதில் மதப்போதகர் புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது, தற்போது அதனில் தலையில் கட்டப்பட்டுள்ள சிறிய துண்டு முடி மற்றும் தலையணை இலைகள் போன்றவை இருப்பதாக ஆராச்சியாளர்கள் குழு AFP பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளது.

மேலும் கல் சவப்பெட்டிக்குள் இலைகள் இருக்கும் நிலைமையை வைத்து பார்க்கும் போது உடல் இன்னமும் நல்ல பாதுகாப்பான நிலையில் இருப்பதாக எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் டொமினிக் கார்சியா வெளியிட்ட அறிக்கையில், கண்டெடுக்கப்பட்டுள்ள 14ம் நூற்றாண்டை சேர்ந்த சவப்பெட்டியை ஆராய்வதன் மூலம் இடைகால இறுதி சடங்குகள் பற்றி அறிந்து கொள்ள உதவும் என தெரிவித்துள்ளது.

போர்க்கப்பலுக்கு அஞ்சலி விழா நடத்திய ரஷ்யா: மாஸ்க்வா நமது அடையாளம் என உருக்கம்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.