மாற்றுத்திறனாளிகளை அவர்களுக்கான பெட்டியில் அனுமதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
சென்னையிலிருந்து புறப்பட்ட அனந்தபுரி விரைவு ரயிலில் மாற்றுத்திறனாளியான ஜீவாவை, மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்குள் ஏறவிடாமல் ரயில்வே ஊழியர் தடுத்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை டிக்கெட்டை காண்பித்த போதும், அனுமதிக்க முடியாது என தாம்பரம் ரயில்நிலையத்தில் வைத்து ரயில்வே ஊழியர் அலட்சியம் செய்துள்ளார். உதவி எண்ணில் புகார் அளித்த பிறகு ரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் வந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியின் பூட்டை திறந்து, அதில் பயணிக்க ஜீவாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால், அதன்பிறகும், ரயில் கார்டு வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியை பூட்டியதாகக் கூறுகிறார் ஜீவா.இது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், இது போன்ற இனி நடைபெறாத வகையில் அனைத்து ரயில்வே பாதுகாவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM