வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி- ‘கொரோனா பரவலால் குறைக்கப்பட்ட ஊதியத்தில் பணியாற்றி வரும் ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு படிப்படியாக பழைய ஊதியம் வழங்கப்படும்’ என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க, விமான சேவைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அதன் ஊழியர்களின் ஊதியத்தை, 55 சதவீதம் வரை குறைத்தது. இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து, விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இதையடுத்து, ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கான ஊதியத்தை படிப்படியாக உயர்த்த உள்ளதாக, ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ‘இம்மாதம் முதல் பழைய ஊதியம் படிப்படியாக வழங்கப்படும்’ என, ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ‘நிரந்தரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் இந்த புதிய திட்டம் பொருந்தும்’ என, ‘டாடா’ குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மீண்டும் பழைய ஊதியம் கிடைக்கஇருப்பதற்கு, ஏர் இந்தியா ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Advertisement