ரஷ்ய மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் பெல்கோரோட் நகரிலே உக்ரைன் குண்டு போட்டு தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை பெல்கோரோட்டில் உள்ள கிராமம் ஒன்றின் மீது உக்ரைன் குண்டு போட்டு தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் பள்ளி சேதடைந்தததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், உக்ரைன் தரப்பில் தற்போது வரை இந்த தாக்குதல் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
O vice-chefe da região de Belgorod nas redes sociais publicou uma foto da destruição por bombardeios na vila de Zhuravlevka, na fronteira com a Ucrânia pic.twitter.com/KctwizAMF8
— 𝐅𝐚𝐥𝐚𝐧𝐝𝐨 𝐝𝐞 𝐃𝐞𝐟𝐞𝐬𝐚 (@falandodedefesa) April 15, 2022
அமெரிக்காவுக்கு ரஷ்ய பகிரங்க எச்சரிக்கை
முன்னதாக, உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள பெல்கோரோட் நகரில், இன்று காலை வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதால் பயங்கர வெடி சத்தம் கேட்டதாக செய்திகள் வெளியானது.
வான் பாதுகாப்பு அமைப்பு பாய்ந்து சென்று நடுவானில் வெடித்த வீடியோ காட்சிகளும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
O Ministério da Defesa russo também relata um Su-27 abatido da Força Aérea Ucraniana na direção de Kharkiv.
Além disso, a julgar pelos relatórios recebidos, algum tipo de UAV foi abatido pelas forças de defesa aérea na região de Belgorod. pic.twitter.com/o8PQBrtfL9— OSINT Brazil (Ukraine War Edition) (@OsintBrazil) April 15, 2022