கால் டாக்ஸி-க்கு அடுத்ததாக மிக பிரபலமாகி வரும் சேவை பைக் டாக்ஸியாகும். இது போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலை அளிக்கும் விதமாக உள்ள நிலையில், மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்ல, இந்த பைக் டாக்ஸிகள் சமீப காலமாக விருப்பமான சேவையாக மாறி வருகின்றன.
பைக் டாக்ஸி ஸ்டார்ட் அப் ராபிட்டோ, ஃபுட் டெக் நிறுவனமான ஸ்விக்கி தலைமையில் 180 மில்லியன் டாலரை திரட்டியுள்ளது.
தீ பிடித்து எரிந்த ஓலா பைக்.. சிஇஓ எடுத்த திடீர் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி..!
அடுத்தடுத்த முதலீடுகள்
இந்த முதலீட்டு திரட்டலானது ஸ்விக்கி-ன் போட்டியாளரான சோமேட்டோ 10 நிமிட உணவு விநியோகத்தினை அறிவித்த இந்த நேரத்தில் வந்துள்ளது. ஏற்கனவே 9 முறை முதலீடுகளை திரட்டியுள்ள ராபிட்டோ, 37 முதலீட்டாளர்கள் மூலம் முதலீடுகளை திரட்டியுள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட 310 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த முதலீடுகளில் முன்னணியில் இருப்பது ஸ்விக்கி தான். இந்த நிறுவனம் கடந்த 2018 மற்றும் 2019களில் இரு நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.
கூடுதல் வருமானம் கிடைக்கும்
இந்த முதலீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராபிட்டோ, ஸ்விக்கியின் முதலீடானது இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உருவாக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததொரு அனுபவித்தினை வழங்கும். இது ஸ்விக்கியின் டெலிவரி நிர்வாகிகள் மற்றும் ராபிட்டோ கேப்டன்களுக்கும் கூடுதல் வருமானத்தினை கொடுக்கும்.
லாகிஸ்டிக்ஸ் சேவையை வழங்கும்
இது குறித்து ஸ்விக்கியின் இணை நிறுவனம் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி, ஸ்விக்கி மற்றும் ராபிட்டோ லாகிஸ்டிக்ஸ் சேவையை வழங்குவதற்கும் ஒரு வாய்ப்பினை உருவாக்கியுள்ளன. இது ரைடர்களுக்கு அதிக வாய்ப்புகளையும், கூடுதல் வருமானத்தையும் கொடுக்கும்.
வணிகத்தினை மேம்படுத்த முதலீடு
இந்த முதலீட்டின் மூலம் ராபிட்டோ தனது தொழில் நுட்பத்தினை மேம்படுத்த பயன்படுத்தப்படும். மேலும் தனது குழுவினை மேற்கோண்டு விரிவாக்கவும் செய்யவும், மெட்ரோ நகரங்கள் டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களில் ஒட்டுமொத்த விநியோகத்தினை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதன் வருவாயினை அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மூன்று வணிகங்களில் முதலீடு
மேலும் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் தங்களது சேவையினை மேம்படுத்தவும், பைக் டாக்ஸி, ஆட்டோ மற்றும் டெலிவரி என்ற மூன்று சேவைகளிலும் முதலீடுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Bike taxi platform Rapido raises $180 million in series D round by swiggy
Bike taxi platform Rapido raises $180 million in series D round by swiggy/ராபிட்டோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டம்.. போட்டியாளர்கள் கவலை!