லட்டு மாதிரி வந்த ரூ.4000 கோடி.. டாடா-க்கு ஜாக்பாட்.. அமெரிக்கா, எமிரேட்ஸ் நிறுவனங்கள் போட்டி..!

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான தேவையும் வர்த்தகமும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இத்துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் தனது உற்பத்தித் திறனைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த வளர்ச்சியில் லாபத்தைப் பார்க்க பன்னாட்டு நிறுவனங்கள் போட்டிப்போட்டு இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயாராக உள்ளது.

இந்நிலையில் டாடா போன்ற முன்னணி நிறுவனத்தில் முதலீடு செய்ய எப்படிப் பன்னாட்டு நிறுவனங்கள் மறுக்கும்.

முதல் நாளே ஏமாற்றம் தான்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ்!

 டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி

டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி

இந்தியாவின் மிக விரிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தளத்தை உருவாக்கும் திட்டத்திற்காக டாடா குழுமத்தின் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி நிறுவனம் சுமார் 4,000 கோடி ரூபாய் நிதியைத் திரட்டியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஏப்ரல் 14ஆம் தேதி கையெழுத்தாகியுள்ளது.

4,000 கோடி ரூபாய் முதலீடு

4,000 கோடி ரூபாய் முதலீடு

டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி நிறுவனத்தில் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் ரியல் அசர்ட் நிறுவனத்தின் தலைமையில் ஐக்கிய அமிரீகத்தைச் சேர்ந்த முபாதலா இண்வெஸ்ட்மென்ட் கம்பெனி இணைந்து சுமார் 4000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டுக்கு டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி நிறுவனத்தின் 10.53 சதவீத பங்குகளைப் பெற உள்ளது.

பிளாக்ராக்
 

பிளாக்ராக்

இதன் மூலம் டாடா பவர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் அமெரிக்காவின் பிளாக்ராக் ரியல் அசர்ட் ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளது. டாடா பவர் ரினியூவபிள் சுமார் 6 துறையில் இயங்கி வருகிறது.

6 பிரிவில் வர்த்தகம்

6 பிரிவில் வர்த்தகம்

டாடா பவர் ரினியூவபிள் 5 நீண்ட கால வர்த்தகப் பிரிவிலும், ஒரு வாடிக்கையாளர் சேவை பிரிவிலும் இயங்கி வருகிறது.
1. யூனிட்டி ஸ்கேல் சோலார்
2. விண்ட் அண்ட் ஹைப்ரிட் ஜெனரேஷன் அசர்ட்
3. சோலார் செல் அண்ட் மாடியூல்
4. EPC காண்டிராக்ட்
5. ரூப்டாப் சோலார் இன்பரா
6. சோலார் பம்ப் மற்றும் EV சார்ஜிங் இன்பரா ஆகிய துறையில் வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.

 வர்த்தகம் மற்றும் சொத்துப் பரிமாற்றம்

வர்த்தகம் மற்றும் சொத்துப் பரிமாற்றம்

மேலும் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி நிறுவனத்தின் மூலமாகவே அனைத்து புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகங்களும் செய்யப்படும் என்றும் டாடா பவர் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சொத்துக்கள் மற்றும் வணிகங்கள் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி-க்கு விரைவில் மாற்றப்படும் என்றும் டாடா பவர் சிஇஓ பிரவீர் சின்ஹா தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Power Renewables gets 4,000 crore investment from US, UAE companies

Tata Power Renewables gets 4,000 crore investment from US, UAE companies லட்டு மாதிரி வந்த ரூ.4000 கோடி.. டாடா-க்கு ஜாக்பாட்.. அமெரிக்கா, எமிரேட்ஸ் நிறுவனங்கள் போட்டி..!

Story first published: Friday, April 15, 2022, 15:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.