வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.