நாளை இரவு வானத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலவை இரவு முழுக்க பார்க்க முடியாது என்றும், அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தோன்றும் எனவும் கூறப்படுகிறது.
நாளை நள்ளிரவு 12.25 மணிக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் நிலவு காட்சியளிக்கவுள்ளது.
சூரியன், பூமி, நிலவு என அனைத்தும் 180 டிகிரிக் கோட்டில் வரும் போது இதுபோன்ற நிகழ்வு நடைபெறும். நிலவின் சுற்றுப்பாதையானது, பூமியின் சுற்றுப்பாதையை விட 5 டிகிரி வேறுபட்டு இருக்கும். இதனால், வழக்கமாக, பூமியின் நிழலைக் காட்டிலும், நிலவின் நிழல் வேறுபட்டுதெரியும்.
இதுபோன்ற வேளையில் சூரியனின் கதிர்கள், நிலவுக்கு அருகே அல்லது பூமியை சந்திக்கும் பக்கத்தை ஒளிரச் செய்யும். காலநிலை மற்றும் மேகக் கூட்டங்களின் மாற்றத்தால் இந்த நிலவு பல வண்ணங்களில் காட்சியளிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.